2025 ஜூலை 02, புதன்கிழமை

'சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியது எமது கடமை'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

'இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தாங்கள் நினைத்தவாறு ஆட்சி செய்தார்கள். அந்த நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில்  நியாயமான முறையில்  நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியது எமது கடமையாக உள்ளது'  என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மெய்கெய்ஷர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி சனிக்கிழமைவரை நடைபெற்ற இறுதிநாள் யொவுன்புர நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,   'தற்போது எமது நாடு ஒரு புதிய யுகத்தை நோக்கிப் பயணிக்கின்றது.
ஏறத்தாழ 30 வருடங்களாக  எமது நாட்டில்  யுத்தம் இடம்பெற்றது. யுத்தம் ஏற்படுவதற்குச் சில  காரணங்கள் இருந்தன. யுத்தம் இடம்பெற்ற முறையை நாம்  அங்கிகரிக்கா விட்டாலும் கூட, அதற்கான காரணங்கள் இருந்தமையை எம்மால்   மறுக்க முடியாது' என்றார்.

'மேலும், எமது நாட்டில் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம். அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. பொருளாதாரம், கடன் சுமை, வறுமை, யுத்தம் காரணமாக எழுந்த பிரச்சினைகள், காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, சிறைக்கைதிகளின் பிரச்சினை,   உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி உள்ளது.
சமத்துவம் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் ஜனநாயகம் மற்றும் புரிந்துணர்வின் ஊடாக இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் தாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.  இந்த நாடு  தங்களுக்கும் சொந்தமான நாடு என்று தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய நிலைமையை  ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும்.
இதை அடைவதற்காக புதிய அரசியல் பிரேரணைகள் அமுலுக்கு வரவேண்டும் என்பது இந்த அரசாங்கத்தின் கொள்கை. அப்பயணத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .