2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'சம்பள நிலுவையை உடன் பெற்றுத் தரவும்'

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை உடன் பெற்றுத்தர கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது தொடர்பில்,அந்த கிளையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பு 23.10.2014 ஆம் திகதி 1885-38ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளரின் 10.11.2014 ஆம் திகதி 35-2014 ஆம் இலக்க சுற்றரிக்கையின் பிரகாரம் நாடு பூராகவும் ஆசிரியர் பதவியுர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் 17 கல்வி வலயங்களில் ஆசிரியர் பதவியுயர்வு,உள்ளீர்ப்பு,சம்பள மாற்றம் தொடர்பில் 18,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய நிலுவைகள் காலதாமதமாகி வருவது கவலைக்குரிய விடயமாகும்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வரும் அதிபர்,ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்கென சுமார் 160 மில்லியன்  ரூபாய் நிதி தேவைப்படுகின்றது.இந்நிதியினை கல்வி அமைச்சை தொடர்பு கொண்டு பெற்று மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக பெற்று கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .