Niroshini / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர்களின் நலன் கருதி எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவிருந்த சம்பளத்தை இன்று புதன்கிழமை வழங்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர், கணக்காளருக்கு அறிவித்திருந்தும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என சுகாதார திணைக்கள ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்பளம் வழங்கும் திகதி 25 என தெரிந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சமூக நலன் கருதி இன்று சம்பளத்தை வழங்குமாறு பிராந்திய சுகாதார திணைக்கள கணக்காளருக்கு பணித்திருந்த போதிலும் கணக்காளர் கிழக்கு முதலமைச்சரின் கருத்துக்கு மதிப்பளிக்காது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) சம்பளத்தை வைப்பிலிடுமாறு மக்கள் வங்கி முகாமையாளரை பணித்துள்ளார்.
கிழக்கு முதலமைச்சரின் கருத்துக்கு மதிப்பளிக்காத இக்கணக்காளர் மீண்டும் தொடர்ச்சியாக சுகாதார திணைக்களத்தில் சேவை செய்ய வேண்டுமா?
இனிவரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என சுகாதார திணைக்கள ஊழியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026