2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'சமப்படுத்தல் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கலாம்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மேலதிகமாக ஆசிரியர்களை கொண்டுள்ள பாடசாலையிலிருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்து ஆசிரியர் சமப்படுத்தல் செய்வதன் மூலம் பின் தங்கிய பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கலாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(13) ஆசிரியர் தின நிகழ்வும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கிராமப்புரத்தில் தான் தேவைகள் அதிகமாகவுள்ளன.இங்கு நகர்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களைப் போல பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்று கற்பதற்கான வாய்ப்பு அரிது.

ஆகவே, திறமையான ஆசிரியர்கள் கிராமப் புறங்களுக்கு அவசியமாகிறது என்றார்.

மேலும்,இவ்வாறான பாடசாலைக்கு சிறந்த வளங்களும் ஆசிரியர்களும் கிடைக்குமிடத்து இவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற இடமுண்டு எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .