2025 மே 22, வியாழக்கிழமை

'சரியான முடிவு கிடைக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடோம்'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

தங்களுக்கு சரியானதொரு முடிவு கிடைக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தின்; பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.அனீஸ் தெரிவித்தார்.

தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக்குரிய திகதியை உடனடியாக அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர் சம்மேளனம் கடந்த திங்கட்கிழமையிலிருந்து (25) முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதுடன், இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ.வின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சருக்கும் தெரியப்படுத்தி எங்களுக்கு உரிய முடிவை பெற்றுத் தருவதாக எங்களை செவ்வாய்க்கிழமை (26) சந்தித்த கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்திருந்தார். எனவே, சுழற்சி முறையிலான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறும் எங்களிடம்  அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், எங்களுக்கு சரியான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .