2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

150 ஜெலட்னைட் குச்சிகளுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

முச்சக்கர வண்டியில் ஜெலட்னைட் குச்சிகள் 150ஐக் கொண்டு சென்ற ஒருவரை, இன்று புதன்கிழமை (03) காலை 9.50 மணியளவில், திருகோணமலை-அநுராதபுரச் சந்தியில் வைத்துக் கைது செய்துள்ளதாக, தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், இறக்கக்கண்டி-04ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.ஆர்.முகம்மது சியாம் (29 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர், கந்தளாய் பகுதியிலிருந்து, இறக்கக்கண்டிக்கு சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, ஜெலட்னைட் குச்சிகளைக் கொண்டு சென்றதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .