2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவு தெரிவித்து திருகோணமலை இளைஞர்  அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக சனிக்கிழமை (21) மாலை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது  'ஜல்லிக்கட்டு விளையாட்டை அமுல்படுத்து',  'ஜல்லிக்கட்டு எமது பாரம்பரிய விளையாட்டாகும்;', 'மனிதனின் உரிமைக்கு முன்னுரிமை கொடு' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X