Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 மார்ச் 07 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
சம்பூர், கிவிலியாப் பகுதிக் கடலில் தூண்டில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின்; வலையில் அகப்பட்ட 4 துப்பாக்கிகளையும்; 2 மகசீன்களையும் திங்கட்கிழமை (6) பொலிஸார் மீட்டுள்ளனர்.
சினைப்பர் துப்பாக்கி -1, எல்.எம்.ஜி ரக துப்பாக்கி -1, ரிப்பிட்டர் ரக துப்பாக்கி -1, ரீ 81 ரக துப்பாக்கி 1, 2 மகசீன்கள் ஆகியவை பையொன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் வலையில் அகப்பட்டதாகவும் இவை சேதமடைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.
தமது வலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பையொன்று அகப்பட்டதைக் கண்டு, தமக்கு மீனவர்கள் தகவல் வழங்கினர். இதனை அடுத்து, அங்கு சென்று இவற்றை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago