Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
தோப்பூர் உப பிரதேச செயலகமானது பிரதேச செயலமாகத் தரம் உயர்த்தப்பட உள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தனவை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட தோப்பூர் பிரமுகர்கள் அமைச்சில் புதன்கிழமை (07) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மூதூர் பிரதேச செயலகத்துடன் இணைந்து இயங்கிவரும் தோப்பூர் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரம் உயர்த்த வேண்டும். அத்துடன், வாரத்தில் 03 நாட்கள் இயங்கும் இச்செயலகத்தை 05 நாட்களும் இயங்கச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கும் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக அதற்கான தினத்தை ஒதுக்கி அந்நாளில் கள உத்தியோகஸ்தர்கள்; சமூகமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.
இக்கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர், 'அடுத்த ஆண்டு புதிய பிரதேச செயலக உருவாக்கம் சம்பந்தமான ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது. அக்குழுவின் பரிந்துரைக்காக தோப்பூர் பிரதேச செயலகக் கோரிக்கையைக் கையளித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்படி உப பிரதேச செயலகம் வாரத்தில் 05 நாட்களும் இயங்கும். உதவிப் பிரதேச செயலாளர் ஒருவர் அங்கு கடமை புரிய ஏற்பாடு செய்யப்படும். அத்தோடு, கள உத்தியோகஸ்தர்கள் சமூகமளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.
தோப்பூர் உப பிரதேச செயலகம் 2007ஆம் ஆண்டு முதல் இயங்குகின்றது. வாரத்தில் 03 நாட்கள் மட்டும் மூதூர் உதவிப் பிரதேச செயலாளர் இங்கு கடமை செய்வது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago