Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்டத்தில் காசநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருவதுடன், இவ்வருடம் ஜனவரியிலிருந்து ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் காசநோயினால் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் சுவாசநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் தியாகராஜா சுரேஸ் தெரிவித்தார்;.
கடந்த வருடம் (2014) இந்நோயினால் 138 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், காற்றினால் காவிச் செல்லக்கூடிய ஒருவகைப் பக்டீரியாவினால் ஏற்படுகின்ற இந்நோய் பற்றி பொதுமக்கள் மத்தியில் போதியளவான விழிப்புணர்வின்மை காணப்படுகின்றது' என்றார்.
பசியின்மை, உடல் மெலிந்து செல்லுதல் இந்த நோய்க்குரிய அறிகுறிகளாகும். மேலும், சூழல்; மாசடைவும் இந்நோய் ஏற்படுவதற்கு காரணமாகும். கைத்தொழில்சாலைகளிலிருந்து வெளியேறுகின்ற புகைகளும் கழிவுகளும் இந்நோயின் தாக்கத்தை அதிகரிக்கின்றது' எனவும் அவர் தெரிவித்தார்.
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago