Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,எஸ்.சசிக்குமார்,எப்.முபாரக்
கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களால் வியாழக்கிழமை(29) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருகோணமலை கணக்கியல் உயர் டிப்ளோமா கற்கை நிலைய மாணவர்களால் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை திங்கட்கிழமையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்று சனிக்கிழமை (31) காலை 11 மணியளவில் திருகோணமலை அநுராதபுரம் வீதியில் வரோதயநகர் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழிநுட்ப கல்லூரி வாயிலில் பிரதான வீதியில் நடைபெற்ற போராட்டமானது இன்று ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்றது.
இந்நிலையிலேயே நாளை திங்கட்கிழமையும் தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை பாரிய அளவில் மேற்கொள்ள திருகோணமலை கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago