Niroshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
கிழக்க மாகாண அமைச்சில் கடமையாற்றும் உயரதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் ஒரு கூட்டுக் குடும்பமாக செயற்பட வேண்டும். அத்துடன் உங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள உயரதிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கு தீர்வினை பெற்றுக்கொள்ளவும். அப்படித்தவரும் பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தவும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் கடமையாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது, இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அமைச்சில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையினை மிக சரியாகவும் திறன்படவும் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் அமைச்சினதும் பொதுமக்களினதும் கடமைகளை மிகச் சரியாக முன்னெடுக்க முடியும்.
நான் அமைச்சில் இல்லையென்று நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை தெரியப்படுத்தலாம். ஆனால் நீங்கள் மிக கண்ணியமாகவும் திறமையாகவும் செயற்பட வேண்டும். அத்தோடு உங்களின் உயரதிகரிகளை மதித்து அவர்களின் ஆலோசனைகளுக்கமைவாக செயற்படுவது அவசியமாகும் என்றார்.

52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago