2025 மே 17, சனிக்கிழமை

'தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தி சேறு பூசக்கூடாது'

Niroshini   / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

“தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தி தனிப்பட்ட ஒருவரின் தகவலை பெற்றுக்கொண்டு அவருக்கு சேறு பூசுவதை தவிர்துக்கொள்ள வேண்டும்” என திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம தெரிவித்தார்.

திருகோணமலை ஜெய்கப் ஹோட்டலில் இன்று (31) தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார நிதியை வரையறுத்தல் மற்றும் சொத்துக்கள் பிரகடனம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

தேர்தல் பிரசார நிதி பாவனை தொடர்பாக நாம் சற்று சிந்திக்க வேண்டும்.அத்துடன், அரசியல்வாதிகள் இதைப்பற்றி எந்தளவுக்கு அறிந்திருக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல்வாதிகள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக குறைந்தது தேர்தல் அறிவித்து 90 நாட்களுக்குள் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.

அத்துடன், தமது நிதிப்பாவனை தொடர்பாகவும் வரவு - செலவுத் திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும்.அதேபோல் நாங்கள் இவை தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால், தகவலறியும் சட்டத்தை பற்றியும் இந்த சொத்துக்கள் பொறுப்புகள் தொடர்பாகவும் நாங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .