2025 மே 17, சனிக்கிழமை

'தண்டக் குறைப்புக் காலத்தில் உரிமை மாற்றம் செய்யுங்கள்'

Thipaan   / 2016 நவம்பர் 03 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள 2016-09-01 தொடக்கம் 2016 -11-30 வரையான தண்டக் குறைப்பு காலப்பகுதிக்குள், வாகனங்களின் உரிமை மாற்றங்களைச் செய்து கொள்ளுமாறு, மூதூர் பிரதேச செயலகத்தால், இன்று வியாழக்கிழமை (03) வெளியிடப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்தின் கணக்காளர் ஜே.எம்.நாளீரினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வாகனங்களை பிறரிடமிருந்து வாங்குகின்ற போது, வாங்கும் உரிமையாளர் 14 நாட்களுக்குள் புதிய உரிமைப் பெயருக்கு மாற்ற வேண்டும். பிந்துகின்ற ஒவ்வொரு நாட்களுக்கும் 100 ரூபாய் தண்டமாக அறவிடப்படும்.

அதேவேளை, வாகனத்தின் உரிமையாளர் இறந்தால், அவர் இறந்ததிலிருந்து 180 நாட்களுக்குள் அவரின் குடும்பத்தாரின் பெயருக்கு மாற்ற வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் ஒவ்வொரு நாளைக்கும் 100 ரூபாய் தண்டப்பணமாக செலுத்த வேண்டுமெனவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக தண்டம் செழுத்த வேண்டிய நிலை ஏற்படின் சிலபோது வாகனத்தின் பெறுமதியினை விடவும் அதிகமாக தண்டம் செலுத்தும் நிலை உருவாகிறது.

எனவே, இந்நிலையினைக் கருத்திற்கொண்டு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தண்டக் குறைப்புக் காலத்துக்குள், தங்களது வாகனங்களின் பதிவுகளை உடனடியாக மாற்றம் செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .