2025 மே 19, திங்கட்கிழமை

'தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்'

Thipaan   / 2016 ஜூலை 27 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

தமிழ்பேசும் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல்  உரிமைகளை, இந்த நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்பதோடு, அதனை பயன்படுத்த அவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அனைத்து செயற்பாட்டுப் படிமுறைகளையும் வகுக்க வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேச மக்கள் சந்திப்பு, செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக மாவட்ட மட்ட இறுதி கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இத்தருணத்தில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைகளும் விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவமும் வழங்குவததையும் நல்லாட்சி அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்' அவர் குறிப்பிட்டார்.

'எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி, புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது தொடர்பாக சமூக மட்ட சிவில் அமைப்புக்களை உள்ளூராட்சி அமைச்சு வேண்டியிருக்கின்றது.

இந்நிலையில் ஏலவே, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாகவுள்ள 42 கிராம சேவையாளர்கள் பிரிவுகளையும், 39,500 வாக்காளர்களையும்  கொண்ட மூதூர் பிரதேச சபையை தரமுயர்த்தி, மூதூர் நகர சபையாக மாற்றவேண்டும்.

அத்துடன், தோப்பூர் பிரதேச சபையும், சம்பூர் பிரதேச சபையும் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் விடுத்துள்ளேன்' என குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X