Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
கட்சியின் தலைமை இந்த அமைச்சுப் பதவியை எனக்குத் தரவில்லை என்றால் நான் இன்று சுகாதார அமைச்சராக இருக்கமுடியாது. கட்சியின் தலைமை எனக்கு என்ன கட்டளையை பிறப்பிக்கின்றதோ அதற்கு நான் கட்டுப்பட்டவனாக இருக்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் மத்திய குழுவின் சிரேஷ்ட தலைவர் ஏ.எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெறற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சுகாதார அமைச்சர் பதவியேற்ற தினத்திலிருந்து இன்று வரை நான் பாரிய சவாலுக்கு மத்தியிலும் இக்கட்டான நிலைமைக்கு மத்தியிலும் தான் இருந்து வருகின்றேன். அந்தளவு எனது செயற்பாடுகள் உள்ளன.
கடந்த காலங்களில் நான் மாகாண சபை உறுப்பினராக இருக்கும்போது, இவ்வறு செயற்பட்டதில்லை. ஓர் உறுப்பினருக்கும் அமைச்சருக்கும் உள்ள பொறுப்புக்களை முன்னெடுப்பது என்பது ஒரு பாரிய சவாலாக அமைந்து காணப்படுகின்றது என்றார்.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago