Suganthini Ratnam / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
சம்பூரில் மீள்குடியேற்றப்பட்டுள்ளவர்களில் 21 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தற்காலிக வீடுகளை கனடா வாழ் தமிழர்களின் ஆதரவுடன் கனேடிய திருமலை நலன்புரிச் சங்கம் கட்டிக்கொடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஆர்.கையிலைவாசன் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சம்பூரில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது. இந்நிலையில், இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண மீள்குடியேற்ற அமைச்சின் நேரடிக் கண்காணிப்பிலேயே இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன.
ஒவ்வொரு வீடும் இரண்டரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டக்கப்படவுள்ளதுடன் ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு வரவேற்பு அறை ஆகியவற்றைக் கொண்டதாக அமையும். 07 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்படுமெனவும் அவர் கூறினார்.
49 பேருக்கு வீடுகளை கட்டுவதற்காக பெயர் விவரத்தை கனேடிய திருமலை நலன்புரிச் சங்கத்தினர் கோரியபோதிலும், மூதூர் பிரதேச செயலகத்தால் 21 பேரின் விவரங்களே முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன், கனேடிய திருமலை நலன்புரிச்சங்கத்தின் செயலாளர் ஆர்.கையிலைவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago