2025 மே 23, வெள்ளிக்கிழமை

பாதுகாப்புப்படை காணிகளை விடுவிக்க வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணத்தில் இன்னும் விடுவிக்கப்படாமல் பாதுகாப்பு பிரிவினரால் பயன்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் தெரிவித்தார்

கிழக்கு மாகாண சபை அமர்வு, இன்று செவ்வாய்க்கிழமை சபையின் 56வது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

புல்மோட்டைப்பகுதியில் தேவைக்கு அதிகமாகவும் அனுமதி பெறாமலும் படையினர் பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து வைத்திருக்கின்றனர். இவற்றை நல்லாட்சியிலும் தொடர்வது வேதனையளிக்கிறது. இதற்கான நடவடிக்கையை இம்மாகாண சபை எடுக்காவிட்டால், மாகாண சபை முன்னர் நான் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்துவேன். அதற்கு சபை இடம்தராவண்ணம் செயற்பட வேண்டும்  என்றார்.

இதற்கு பதிலளித்த சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி,

இவ்விடயம் தொடர்பாக மத்தியரசின் முக்கியமான பிரிவினரின் கவனத்துக்கு கொண்டுவருவதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X