2025 மே 15, வியாழக்கிழமை

'போராட்டங்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 29 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல், அரசாங்கம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுத்து  போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் ரெலோ அமைப்பின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர், இன்று (29) தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. அவர்களின் போராட்டங்கள் நியாயமானதே.

யுத்தம் முடிந்த போதும், இதுவரையில் தங்களின் காணிகள் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறி  கேப்பாப்புலவு, வலிவடக்கு மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அம்மக்கள் அரசாங்கக் காணிகளைத் தருமாறு கேட்கவில்லை. தாம் பூர்வீகமாக வாழ்ந்துவந்த தங்களின் காணிகளை விடுவித்து தங்களைக் மீள்குடியேற்றுமாறே கேட்கின்றார்கள்.

இன்னொருபுறத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை அவர்களின் உறவினர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றனரா? இல்லையா?  அவர்களின் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்பதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.

இவை இவ்வாறிருக்க, வேலையில்லாப் பட்டதாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு வெளியேறும் பட்டதாரிகளுக்கு ஒரு வருடத்துக்குள் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .