Niroshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பொது நூலகம் நீண்ட காலமாக திறக்கப்படாது இருளில் மூழ்கி காணப்படுவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
சுமார் எட்டு வருடங்களாக திறக்கப்படாது பிரதேச மாணவர்களின் அறிவுத் தேடல்களையும் இல்லாமலாக்கி நூலகம் திறக்கப்படாது இருப்பது கவலையளிக்கின்றது.
இந்நூலகத்தினை பேராறு, அணைக்கட்டு,மத்ரஸா நகர் மற்றும் 2ஆம்,3ஆம் கொலனி மக்கள் பாவித்து வந்திருந்த நிலையிலேயே ஐந்து கிலோ மீற்றருக்கப்பால் காணப்படும் கந்தளாய் பிரதேச சபைக்குரிய பொது நூலகத்துக்கு செல்லவேண்டியுள்ளது.
இதனால் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதோடு தமிழ் புத்தகங்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டோரின் கவனத்துக்கு பலமுறை கொண்டு வரப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்வில்லை.
எனவே, கூடிய விரைவில் இந்நூலகத்தை திறப்பதற்கு சம்பந்தப்பட்டோர் ஆவண செய்யுமாறு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026