Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாண மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான உதவிகளை கிழக்கு மண்ணுக்கு வழங்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
திருகோணமலை, ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற எமது உறவுகள் ஈழமண்ணிலே பல உதவிகளை செய்து வருவதை நான் அறிவேன்.
கிழக்கு மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு சில அன்பர்களே உதவி உதவிசெய்கிறார்கள்.
கிழக்கு மண்ணுக்கு பெரும்பாலான உதவிகளை இதுவரை வழங்கி வருவது வட மாகாணத்தை சேர்ந்த புலம்பெயர் உறவுகள் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கிழக்கு மண்ணைச் சேர்ந்தவன் என்ற வகையில் அவர்களை பாராட்டுவதில் பெருமைகொள்கிறேன். அவர்களது சேவையால் பல உதவிகள் கிழக்கு மண்ணுக்கு வந்துசேர்கிறது.
இவர்கள் செய்யும் உதவிகளுக்கு பிரதியுபகாரமாக எமது மாணவச் செல்வங்கள் கல்வியில் உயர்நிலையடைந்து உயர்கல்விமான்களாக வரவேண்டும் என்றார்.
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago