Niroshini / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
பாடசாலைகளில் எமது பிள்ளைகள் எதிர்நோக்குகின்ற சவால்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருந்துகொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்சம்சுதீன் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியரும் அதிபருமான கலாபூசனம் யூ.எல்.ஆதம்பாவா எழுதிய 'குழந்தைகள் வெள்ளைக் காகிதம்' எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது சமூகத்துக்கென்று எமது கலாசார பாரம்பரியங்களுடன் பாடசாலைகளை நடத்திச் செல்லக்கூடிய உரிமை எமக்கு இந்த நாட்டில் இருந்துகொண்டிருக்கின்றது.
இந்த உரிமையினை நாங்கள் தக்க வைத்துக்கொள்கின்றோமா? இந்த உரிமையினை நாங்கள் சரிவரப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோமா? என்றொரு கேள்வியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் எழுப்ப வேண்டியிருக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றதா? என்றொரு கேள்வியினை நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கின்றது.
ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் குழுக்கூட்டம் நடத்தப்பட்டு தங்களுடைய பிள்ளைகளுடைய முன்னேற்றம், தங்களது பிள்ளைகளினுடைய வகிபங்கு அந்த வகுப்பறையில் எவ்வாறு இருக்கின்றது என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும்.
எமக்குக் கிடைத்த பெரும் சுதந்திரமாக சமூகத்துக்கென்று பாடசாலைகள், எமது சமூகத்துக்கென்று கல்வி வலயங்கள் போன்ற உரிமைககளைக் காணலாம்.
எமது உரிமைகள் பறிக்கப்பட்டு அனைத்து பாடசாலைகளிலும் எமது சமூகத்தினுடைய நாமம் கொண்ட பாடசாலைகளை இனிமேல் தொடங்க முடியாது என்று சட்டங்கள் ஆக்கப்பட்டிருந்தாலும், அது வியப்புக்குரியதாக இருந்திருக்க முடியாது.
ஆகவே, இந்த உரிமையினை நாங்கள் எவ்வாறு பாதுகாத்துக்கொண்டிருக்கின்றோம், எவ்வாறு இந்த உரிமையினை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வியினை நாங்கள் கேட்டு அதற்கு விடை கண்டு அதற்குரிய சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய அவசியம் எமக்கு இருந்து கொண்டிருக்கின்றது என்றார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026