Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 16 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை சேனையூர் பகுதியில், 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என்பவரை, வியாழக்கிழமை (14) கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண்ணை, இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை மீளச் செலுத்தாமையால் அதுதொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து, பக்கத்துவீட்டுப் பெண், ஒவ்வொரு நாளும் திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையே இவ்விருவருக்கும் இடையில் குரோதம் வளரக் காரணமானது. இந்த விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற வாக்குவாதம் , அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்நிலையிலேயே, இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் படுகாயமடைந்த பெண், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றையதினம் இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கத்தியால் குத்திய பெண்னை, மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்தே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .