2025 மே 22, வியாழக்கிழமை

படுகாட்டு வயற்காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

நீண்டகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கங்குவேலி படுகாட்டு வயற்காணிகளில் கடந்த திங்கட்கிழமை அவற்றின் பூர்வீக உரிமையாளர்களான தமிழ் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட மூதூர் பிரதேச செயலகம் மற்றும் பொலிஸாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

298 ஏக்கர் வயற்காணிகளிலேயே 150 தமிழ் விவசாயிகள் மீண்டும் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சில பெரும்பான்மையின விவசாயிகள் அப்பகுதிகளுக்குள் அத்துமீறிச் சென்று அச்சுறுத்தி வருவதாக படுகாட்டு தமிழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அறிவதற்காக நேற்று வியாழக்கிழமை  படுகாட்டு வயல் பகுதிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன் மற்றும் ஜெ.ஜெனார்த்தனன் சென்றனர்.  இவ்விடயம் தொடர்பாக விசாரித்ததுடன், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

தமது விவசாய நடவடிக்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் உள்ளதால் தமது வயல் பகுதிக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். மேலும், விவசாயத்துக்கு நீர் பாய்ச்சும் கால்வாய்களை சீரமைத்துத் வழங்குமாறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்பதால் விதை நெல் மானியம் மற்றும் மூலதனமும் கோரினார்கள். இவற்றுக்கான நடவடிக்கையை எடுப்பதாக மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .