2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பண மோசடி செய்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 14 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்,முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2 இலட்சம் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் 36 வயதுடைய ஒருவரை இம்மாதம் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துஷித்த தம்மிக்க, ஞாயிற்றுக்கிழமை (13) உத்தரவிட்டார்.                               

கருவாட்டு வியாபாரம் செய்வதற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம்  ரூபாயை கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சந்தேக நபர் வாங்கியுள்ளார். இதன் பின்னர் 50 ஆயிரம் ரூபாயை திரும்பிக்கொடுத்துள்ளார். மீதி 2 இலட்சம் ரூபாயை பின்னர் தருவதாகக் கூறி சந்தேக நபர்  தலைமறைவாகியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் பணத்தை வழங்கியவர் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், சந்தேக நபரை  நண்பர் ஒருவரின் வீட்டில் சனிக்கிழமை (12) இரவு கைதுசெய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .