Niroshini / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பருவ மழைக்கு முன்னர் சம்பூர் மக்களுக்கு அடிப்படை வசதி முழுமையாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பருவ மழை தொடங்க முன்னதாக முடிந்தவரை குறித்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அடுத்த வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை காலம் ஆரம்பமாக முன்பு கழிப்பறை மற்றும் தற்காலிக இருப்பிடங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையாவிட்டால்,அம்மக்கள் அங்கிருந்து வெளியேறி மீண்டும் பழைய அகதி முகாம்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026