2025 மே 19, திங்கட்கிழமை

மூதூர், தோப்பூர் மக்கள் வெளியேற்றப்பட்ட பத்தாண்டு நினைவுகள்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், எம். முபாரக்

 

மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்ட பத்தாண்டு ஈரநினைவுகள் எனும் தலைப்பிலான நிகழ்வு, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தலைமையில், திருகோணமலை காரியாலயத்தில் நேற்றுக் காலை (02)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகிர்  உரையாற்றுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள், 02.08.2006 மூதூர் தோப்பூர் பகுதிகளை நள்ளிரவோடு கைப்பற்றியதோடு, பலமான பல பிரங்கித் தாக்குதல்களையும் நடத்தினர். இதனால் மறுநாள் காலை மூதூரின் பல பிரதேசங்களில் ஜனாஸாக்கள் கிடந்ததோடு, மூதூரை விட்டு வெளியேறுமாறும் தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிவித்ததையடுத்து, ஓகஸ்ட் 2ஆம் திகதி ஜும்மா தொழுகையும் தொழாமல் மூதூர், தோப்பூர் பிரதேசாங்களை விட்டு மக்கள் பலவந்தமாக வெளியேற்றினர்.

 வெளியேறுவதற்கு கினாந்தி முனை ஊடாகவே செல்ல வேண்டும் என்று நிர்ப்பந்தித்தோடு அப்பகுதியில் வைத்து கடுமையான மல்டி பெறல் தாக்குதலில் 54 முஸ்லிம் சகோதரர்கள் உயிர் இழந்தனர்.

இத்தாக்குதலில் உயிரிழந்த சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும், இன்றைய தினத்தை அவர்களுக்கான தினமாக மக்கள் நினைவு கூருமாறும் மிகவும் பணிவாக வேண்டுகின்றேன்.

அத்தோடு, யுத்த காலங்களில் உயிர் நீத்த சகோதரர்களுக்காகவும் அனர்த்தங்களின் போது உயிர் இழந்த சகோதரர்களுக்காகவும் கடத்தப்பட்டு இதுவரையும் விடுவிக்கப்படாத சகோதரர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு கோருகின்றேன்' என்று குறிப்பிட்டார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X