2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'மூவின மக்களுக்கும் சேவையாற்றுவேன்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களுக்கும்  சமாந்திரமான முறையில் தனது சேவையை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (02) தனது கடமையை மாகாண சுகாதார அமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு உரையாற்றிய அவர், 'முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு, எனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளேன். இந்நிலையில்,  கிழக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள  சுகாதார, சுதேச வைத்தியத்துறையை முன்னேற்றும் நடவடிக்கையை முன்னெடுப்பேன்' என்றார்.  

சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்;, திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .