Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூலை 05 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
வெளிநாட்டு முதலாளித்துவ சமூகத்துக்கு நமது மக்களை விற்று, டொலரினைப் பெறுவதே இன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
நாட்டில் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்படும் நிலை உருவாவதை யாராலும் தடுக்க முடியாமல் போகப் போகிறது எனத் தெரிவித்தார்.
கந்தளாய் அகில ஹோட்டலில், நேற்று திங்கட்கிழமை (04) நடைபெற்ற வற் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விழிப்பூட்டும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் வற் அதிகரித்துச் செல்லும் போது, மக்கள் தொழில்நிலை பாதிக்கப்படும் அதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு மக்களை உட்படுத்தி வெளிநாட்டுக்கு டொலருக்கு விற்கின்ற கைங்கரியத்தையே அரசாங்கம் மேற்கொள்கிறது.
எனவே, மக்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். எமது முன்னணி, மக்கள் சக்தியினைத் திரட்டி, நாடு பூராகக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளது. அதற்கு பொது மக்களாகிய உங்களுடைய ஆதரவு தேவை.
அதேவேளை, நாட்டில் உடனடியாக 'வற்'ஐக் குறைத்து மக்களின் வாழ்க்கைச் சுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அரசாங்கத்தின் கடமையாகும் எனத் தெரிவித்த அவர், தவறும் பட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுவதில் எதுவித மாற்றமும் இல்லை' என தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago