2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தைக்கா நகர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் கடல் மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதத்தை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, நேற்றுப் புதன்கிழமை விதித்துள்ளார்.

மேலும், பொலிஸாருக்கு கடமையைச் செய்யவிடாது ஏசிய குற்றச்சாட்டுக்காக 1,500 ரூபாயும் விதிக்கப்பட்டது.

உழவு இயந்திரத்தை 05 இலட்சம் ரூபாய் பிணையில் கொண்டு செல்லுமாறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 09 மணி முதல் 12 மணிக்குள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையொப்பம் இட வேண்டும் எனவும் நீதவான் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 கடந்த 8ஆம் திகதி இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து,  மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது பொலிஸாருக்கு ஏசிவிட்டு இவர் தப்பியோடியுள்ளார். இதன் பின்னர் இவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .