2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

Niroshini   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்           

திருகோணமலை ஜயந்திபுர பிரதேசத்தில் இன்று புதன்கிழமை(16) காலை பனை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வசந்த குமார் (வயது52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.    

பனை மரத்தில் ஏறி பனைமட்டைகள் வெட்டிக்கொண்டிருக்கும் போது வேகமாக வீசிய காற்றினால் குறித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .