Niroshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய அப்துல்லாஹ் மஹ்ரூப்புக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட முதுகலைமாணி பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அனுபவம், ஆற்றல் மற்றும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகளை ஆழமாக ஆராய்ந்து வைத்திருப்பவர் என்பதனாலும்,
இம் மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு செல்லக்கூடியவர் என்பதனாலும்,
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றக் கூடியவர் என்பதனாலும் இவருக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026