2025 மே 19, திங்கட்கிழமை

'வீட்டுக்கு வீடு மரம்' வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'வீட்டுக்கு வீடு மரம்' வேலைத்திட்டம், கட்சியின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில், கந்தளாயில்;, இன்று திங்கட்கிழமை (01) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கட்சியின் முன்நோக்கிய பயணத்தை தொடர்வதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு கட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்லுமுகமாகவும், விசேடமாக பசுமை பேணல், சூழல் புரட்சி, பாதுகாப்பு என்பவற்றை ஊக்குவித்தல் என்ற தொனிப்பொருளிலேயே இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கந்தளாய் சேருவில தொகுதிக்கான 'வீட்டுக்கு வீடு மரம்' அங்குரார்ப்பண நிகழ்வு, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கந்தளாய் பேராறு பிரதேசத்தில் நடைபெற்றது. இதன்போது மக்களுக்கு பயன்தரக்கூடிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உட்பட கட்சி உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X