Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
பெரிய உலகத்தில் எவ்வளோ கழிந்து விட்டது. ஒரு சிறிய மண் துண்டே இருக்கின்றது. அதிலே தான் மனிதனின் இன்பமும் துன்பமும் இருக்கின்றது என சிரேஷ்ட ஊடகவியலாளர் உபாலி கமகே தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தின் நச்சுத்தன்மையற்ற நாடு, நஞ்சற்ற உணவு எனும் திட்டம் இன்று சனிக்கிழமை (18) திருகோணமலை ஜக்காப் பார்க் விடுதியில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“வாழ்க்கை என்பது ஒரு மனிதனின் உன்னதமான ஒன்று. அதனை நமது வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும். இன்று இலங்கையை ஆட்டிப்படைக்கின்றது கிரீம் வகைகள் இதில் எவ்வளவோ மருந்து வகைகள் காணப்படுகின்றன. இதனைக் கொண்டு நமது முகங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கின்றோம். அதனை ஊடகங்கள் தெளிவுபடுத்துவது கிடையாது.
ஊடக நிறுவனங்கள் விளம்பரங்களை வெளிக்காட்டவே முயல்கின்றன. அதனைத் தடுத்து விவசாய நஞ்சற்ற மக்களாக மாற்றுவதற்கு முயல்வது கிடையாது. உண்மையான ஊடகவியலாளர்கள் ஒரு சிறந்த மனிதனை உருவாக்கவும் சமூகத்துக்கு சிறந்த உண்மையான தகவல்களை சென்றடையவுமே செயற்பட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் எங்கே விபத்து நடைபெற்றிருக்கின்றது, எங்கே கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று தான் தேடுகின்றோமே தவிர, உண்மையான செய்திகளையோ சூழல் சம்பந்தமான செய்திகளையோ அனுப்புவதில்லை.
சூழலில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை கொண்டு செல்ல வேண்டும் உதாரணமாக காடழிப்பு, காட்டுத்தீ, சூழலில் நடைபெறுகின்ற தாக்கங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு சில கருத்துக்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு செயற்பட வேண்டும். சூழலியல் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட சேயா சந்தமி மற்றும் வித்தியாவின் உடுப்புகளையும் இடங்களையும் ஊடகம் முன்னின்று முந்திக் கொன்று வெளியிடுகின்றார்கள் தவிர, தேவையான விடயங்களையும் விபரங்களையும் தெளிவுபடுத்துவதில்லை. ஊடகவியலாளர்கள் ஆர்வத்தோடு விசமற்ற நாட்டினை உருவாக்க ஒரு குழுவாக செயற்பட முன்வர வேண்டும்” என்றார்.
5 minute ago
7 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
21 minute ago
33 minute ago