Thipaan / 2016 ஜூன் 09 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, மூதூர் கிழக்கிலுள்ள தமிழ்க் கிராமங்களில், பொதுமக்களின் விவசாயக் காணிகள், வன பாதுகாப்புத் திணைக்களத்தால் அளக்கப்பட்டு எல்லைக் கல்லிடும் பணிகள் இடம் பெற்று வருவதாகவும் இவ்வாறான செயல், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதுடன் அவர்களின் காணி உரிமையையும் மீறும் செயலாகும் என கட்டை பறிச்சான் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கதிரவேளிப்பிள்ளை திருச்செல்வம், இன்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த சில தினங்களாக மூதூர் கிழக்கிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளான கட்டை பறிச்சான் தெற்கு, பள்ளிக்குடியிருப்பு, பாட்டாளிபுரம் போன்ற இடங்களிலுள்ள விவசாயக் காணிகள், வன பாதுகாப்புத் திணைக்களத்தால் அளக்கப்பட்டு எல்லைக்கல் இடப்படுகிறது.
இக்காணிகளில் பெரும்பாலானவை விவசாயக் காணிகளாக காணப்படுகின்றன. யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டளவில் இக்காணிகளில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தாம் விவசாய நடவடிக்கையில் ஈடுபடச் சென்றபோது, இங்குள்ள பற்றைகளையும் மரங்களையும் வெட்டி விவசாயத்தில் ஈடுபட பொலிஸார் அனுமதிக்காத காரணத்தால், இப்பகுதி பற்றைக் காடுகளாகக் காணப்படுகிறது.
எனினும், தற்போது இக்காடுகளை அகற்றி விவசாயம் செய்ய அனுமதிப்பதை விட்டு, அவற்றை அரச காணியாக எண்ணி எல்லைக்கல் இடுவது அநீதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் சம்மந்தமாக மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago