2025 ஜூலை 23, புதன்கிழமை

7 வர்த்தகர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேருவில பிரதேச செயலகப் பிரிவில் சுகாதாரத்துக்கு ஒவ்வாத, தரமற்ற, காலாவதியான உணவுகளை விற்பனைக்கு  வைத்திருந்த 07 வர்த்தகர்களுக்கு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான்; ஐ.N.றிஸ்வான், செவ்வாய்க்கிழமை (06) அபராதம் விதித்தார்.

வர்த்தகர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டமைக்கு அமைய ஒருவருக்கு 1,000 ரூபாயும் ஒருவருக்கு 1,500 ரூபாயும் 03 பேருக்கு 5,000 ரூபாயும் ஒருவருக்கு 5,500 ரூபாயும் ஒருவருக்கு 11,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.    

மேற்படி பிரிவில் அமைந்துள்ள செல்வநகர், சேருநுவர, சேருவில ஆகிய பிரதேசங்களிலுள்ள உணவகங்கள், கடைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டனர். இதன்போதே மேற்படி குற்றச்சாட்டுகளில்  07 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .