2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'வர்ஷனம் கொம்'இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

இலங்கை மற்றும் வெளிநாடுகளுக்கான முதலாவது தமிழ் மொழி மூலமான இணைய விளம்பர சேவை 'வர்ஷனம் கொம்'எதிர்வரும் வியாழக்கிழமை(22) முதல் தனது சேவையை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.வ.வாகிசன் தெரிவித்தார்.      

எதிர்கால விளம்பரம் என்பதை தனது தொனிப்பொருளாகக் கொண்டு செயற்படும் வர்ஷனம் கொம் சேவையானது நவீன இணைய தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும்.

இலங்கையின் மாவட்டங்களையோ வியாபார வகைகளையோ தெரிவுசெய்து தேடுவதன் மூலம் பயனர்கள் இலங்கை முழுவதும் அமைந்துள்ள வியாபார ஸ்தாபனங்களை இலகுவில் கண்டறிய முடிவதுடன் அவற்றின் அமைவிடங்களையும் இலகுவில் தாமாகவே கண்டறிந்து கொள்ளவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .