2026 மார்ச் 23, திங்கட்கிழமை

18 வழக்குகள் உள்ளவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,ஏ.எஸ்.எம்.யாசீம் 

திருகோணமலை பிரதேசத்தில் திருட்டு பொருட்களை தம் வசம் வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் திருடியமை ஆகிய  18 திருட்டு வழக்களையுடைய சந்தேகநபரை, எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி, நேற்று சனிக்கிழமை (24) உத்தரவிட்டார்.    

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவ்லேன், அன்புவழிபுறம் மற்றும் பாலையூற்று ஆகிய பகுதிகளில் சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

அலைபேசிகள், மடிக்கணினிகள், பெறுமதியான கைக்கடிகாரம் மற்றும் இலத்திரணியல் பொருட்களைத் திருடியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .