2025 மே 19, திங்கட்கிழமை

2 ஹோட்டல்களுக்கெதிராக சட்டநடவடிக்கை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை நகரிலுள்ள 2 ஹோட்டல்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாரசபை அதிகாரிகள், திருகோணமலை நகர்ப் பகுதிகளிலுள்ள பலசரக்கு கடைகள், ஹோட்டல்களை நேற்று (10)  சோதனைக்குட்படுத்தினர்.

ஹோட்டல் ஒன்றில், 50 ரூபாய்  பெறுமதியான தண்ணீர்ப் போத்தல் 60 ரூபாய்கும் மற்றைய ஹோட்டலில் 60 ரூபாய் பெறுமதியான தண்ணீர்ப் போத்தல் 70 ரூபாய்கும விற்பனை செய்ததினாலேயே, குறித்த ஹோட்டல்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X