2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

1,500 போதை மாத்திரைகள்; நபரொருவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலையில் 1,500 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட நபரொருவரை, நாளை மறுதினம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், 150 போதை மாத்திரை அட்டைகளுடன், திருகோணமலை நகரில் நின்ற போது, திருகோணமலை குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ​நேற்று முன்தினம் (01) கைதுசெய்யப்பட்டார் எனவும் இவரிடமிருந்து 1,500 போதை மாத்திரைகளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .