2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

1,500க்கும் அதிகமான மாடுகள் உயிரிழப்பு

தீஷான் அஹமட்   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்,  கடந்த டிசெம்பர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,500க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளனவென, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தெரிவித்தார்.

இதனால் மாடு வளர்ப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளனர் எனத் தெரிவித்த தவிசாளர், ஆகவே, இவர்களுக்கான நட்டஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று (26) அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, மூதூர் பிரதேசத்தில் அதிகளவில் மாடுகள் உயிரிழப்பதற்கு மேய்ச்சல் தரைப் பிரச்சினை, புளுத்தாக்கம் என்பன முக்கிய காரணங்களாக உள்ளனவென்றார்.

எனவே, எதிர்காலத்தில் மாடுகளின் இறப்பு வீதத்தை தடுக்க வேண்டுமாக இருந்தால், இவ்விரண்டு பிரச்சினைக்குமான நிரந்தரத் தீர்வுகளைக் பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த  வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .