2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்,தீஷான் அஹமட் 

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம் , திருகோணமலை மாவட்டத்தில் ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் இன்று (03)  நடைபெற்றுள்ளது.

இப் போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என 150 இற்கும்  மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட  வடக்கு, கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய  அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி நடைபவணியாக வருகைதந்து மைதானத்தில் கூடியிருந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்

அத்துடன் அடுத்தக்கட்ட போராட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கறைத்துறைப்பற்றில்   நாளை வியாழக்கிழமை (04) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X