2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

100 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

தீஷான் அஹமட்   / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட  100 பயனாளிகளுக்கு, உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு, தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இன்று (22) நடைபெற்றது.

மூதூர் பிரதேச செயலத்தின் ஏற்பாட்டிலும், குளோபல் இஹ்ஸான் றிலீப் அமைப்பின் அனுசரணையிலும் இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், குளோபல் இஹ்ஸான் றிலீப் அமைப்பின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X