Princiya Dixci / 2021 ஜூலை 21 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 55 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன்படி, ஒரு மைதானத்தின் அபிவிருத்துக்கு தலா 5 மில்லியன் ரூபாய் வீதம் செலவு செய்யப்படவுள்ளது.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மூலம் இவ்வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்த வேலைத்திட்டங்களை உடன் ஆரம்பித்து விரைவில் நிறைவு செய்யுமாறு, கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு நிதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, அம்பாறை - தமண அலஹேன விளையாட்டு மைதானம், சம்மாந்துறை - நாவிதன்வெளி பொது விளையாட்டு மைதானம், பொத்துவில் - லாஹூகல பிரதேச சபை பொது விளையாட்டு மைதானம், கல்முனை - பொலிவேரியன் விளையாட்டு மைதானம், கல்குடா - பேத்தாளை பொது விளையாட்டு மைதானம் ஆகிய விளையாட்டு மைதானங்கள் அதிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மேலும், மட்டக்களப்பு - வேலூர் சக்தி பொது விளையாட்டு மைதானம், பட்டிருப்பு - முனைக்காடு பொது விளையாட்டு மைதானம், சேருவில - சேருவில பொது விளையாட்டு மைதானம், திருகோணமலை - அபயபுர பொது விளையாட்டு மைதானம், மூதூர் - மூதூர் பொது விளையாட்டு மைதானம், மூதூர் - கிண்ணியா பொது விளையாட்டு மைதானம் ஆகிய விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026