2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

12 இராச பல்லிகளை விற்க முயன்ற மூவருக்கு பிணை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்

இராச பல்லிகளை 12 ஐ முச்சக்கர வண்டியொன்றில் எடுத்துசென்ற போது திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிலுள்ள தானியகம என்னும் இடத்தில் வைத்து சனிக்கிழமை கைது செயய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த மூவரையும் திருகோணமலை பதில் நீதவான் திருச்செந்தில்நாதன் முன்னிலையில் சனிக்கிழமை மாலை  ஆஜர்செய்தபோதே அந்த மூவரையுமு; 50,000 ரூபா சரீர பிணையில் நீதவான் விடுதலை செய்தார்.

இந்த மூவரையும் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மே மாதம் 5 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே.எம்.லாகீர ஆஜராகி இருந்தார்.

கைப்பற்றப்பட்ட பல்லிகள் 12ஐயும்  மிருகவைத்தியர் ஊடாக சோதனை செய்து  அவற்றினை திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் விடுவிக்குமாறும்  வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இராச பல்லி இனங்கள் இலங்கையில் மாத்திரம் காணப்படுவதாக வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பதில் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதன் காரணமாகவே இதனை வெளிநாட்டினர் விலை கொடுத்து பெற்றுக்கொள்ள முன்வருகின்றார்கள்.

வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக இப்பல்லிகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. பல்லி ஒன்று ஒருஇலட்சம் ரூபாய் வரை விலை மதிக்கப்படுகின்றது என்றும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X