2025 மே 05, திங்கட்கிழமை

12 வருடங்களின் பின்னர் ஒருவ​ர் கைது

எப். முபாரக்   / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவரப் பகுதியில் ஒருவரைத் தாக்கிக் காயமேற்படுத்தி விட்டுத் தலைமறைவாக இருந்த சந்தேகநபரை, 12 வருடங்களின் பின்னர் இன்று (12) கைதுசெய்துள்ளதாக, சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெருகல், மாவடிச்சேனை, வாழைத்தோட்டம் பகுதியைச் 41 வயதுடைய ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு, தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவரை கடுமையாகத் தாக்கிவிட்டு குறித்த நபர் தலைமறைவாகியதாகவும் அவருக்கெதிராக மூதூர் நீதிமன்றில் வேறு பல வழக்குகள்  நடைபெற்று வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பாக சேருநுவர குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X