2025 மே 05, திங்கட்கிழமை

13 பாடசாலைகளுக்கு வாய்ப்புக் கிட்டின

Princiya Dixci   / 2021 மே 26 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

1,000 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக 13 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக பெயரிட முடிந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவான் அத்துக்கோரள தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதையடுத்து இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கல்வி உபகரணங்களை வாங்குவதற்கும் இப்பாடசாலைகள் ஒவ்வொன்றிற்கும் தலா 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 10.06.2021 அன்று அவை தேசிய பாடசாலையாக மாற்றப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் 17 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X