2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

17 மில்லியன் ரூபா செலவில் திருமலை கண்சிகிச்சை பிரிவு அபிவிருத்தி

Kogilavani   / 2014 பெப்ரவரி 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்

திருகோணமலை பொது வைத்தியசாலை கண்சிகிச்சைப் பிரிவை அபிவிருத்தி செய்வற்கு சர்வதேச லயன்ஸ் கழக நிதியம் 17 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.

லயன்ஸ் கழகம், மாவட்டம் 306 சி-1 இன் ஆளுநர் லயன் ஐனரஞ்சன் பாலசிங்கம் சர்வதேச லயன்ஸ் கழக நிதியத்திற்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நிதி வழங்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தின் செயற்றிட்டப் பணிப்பாளர் லயன் உதயசங்கர் பாலசிங்கம் கூறினார்.

இந்நிதியை கொண்டு எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் வைத்தியசாலையின் கண்சிகிச்சைப்பிரிவு முழுமையான கண் மருத்துவ சிகிச்சைக்கான 24 பிரதான உபகரணங்களைக் கொண்ட சிகிச்;சைப் பிரிவாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X