2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

200,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்கூட்டிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றும் 22 மருத்துவ மாதுகளுக்கு தலா 200,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்கூட்டிகள் யுனிசெப் நிறுவனத்தினால் திருகோணமலை, பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வியாழக்கிழமை (6) வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் இதனை கையளித்தார்.

இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.கருணாகரண், மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கௌ.ஞானகுணான். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய அத்தியட்சகர் அனுசியா ராஜ்மோகன், யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி  பிரகாஷ் துலாதர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மூதூர் தள வைத்தியசாலை பணிப்பாளரிடம்  2 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான  மருத்துவ உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X