2025 ஜூலை 09, புதன்கிழமை

திருமலை கிரிக்கெட் மைதான பணிகளை நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண ஆளுநர் நிதியில் திருகோணமலை பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதான வேலைகளை நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

மெக்கெய்சர் விளையாட்டு அரங்கிற்கு பின்புறம் இக்கிரிகெட் மைதானம் அமைக்கப்படடு வருகின்றது. முதற் கட்டமாக மைதானத்தை செப்பனிட்டு வேலி  அடைக்கும் பணிகள் இடம்பெற்று முடிவடைந்த நிலையிலேயே இந்த அறிவித்தல் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இம்மைதானத்தை முதல் தர போட்டிகள் நடத்தக் கூடியவாறு அபிவிருத்தி செய்ய திட்டமிட்டு அதற்கான நிதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மைதானத்தை மட்டப்படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .